நடிகர் அஜித்தின் மச்சினிச்சியா இவர்?… உடல் எடையை குறைத்து செம ஸ்டைலாக மாறிட்டாரே… வைரலாகும் வீடியோ இதோ….

நடிகர் அஜித்தின் மச்சினிச்சியான ஷாமிலி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது .

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். தற்போது இவர் நடிப்பில் ‘துணிவு’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சமீபத்தில் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. நடிகர் அஜித் நடிகை ஷாலினி 2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது இவர்களுக்கு அனுஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

   

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தல அஜித்திற்கு ஒரு மச்சினிச்சி உள்ளார். அவர் பெயர் ஷாமிலி. இவர் 1990ல் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ திரைப்படத்தில் மனநலம் குன்றிய குழந்தையாக நடித்து அனைவரையும் அசத்தியவர் பேபி ஷாமிலி. இதற்காக அவருக்கு பல விருதுகள் கிடைத்தது.

இதை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல படங்களில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். இவர் 2016 விக்ரம் பிரபு நடித்த ‘வீரசிவாஜி’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஷாமிலி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தொடர்ந்து தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார்.

இவர் தனது instagram பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்நிலையில் நியூ இயர் ஸ்பெஷல் ஆக வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை ஷாமிலியா இது? ஆள் அடையாளமே தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வைரலாகும் வீடியோ இதோ….

 

View this post on Instagram

 

A post shared by Shamlee (@shamlee_official)