‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த பிரபல நடிகரா?… யார் தெரியுமா?… வைரலாகும் தகவல் உள்ளே…

2008 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘சுப்ரமணியபுரம்’. இத்திரைப்படத்தை சசிகுமார் இயக்கி நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு உள்ளிடோர் நடித்திருந்தனர். சுப்ரமணியபுரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

   

அந்த படத்தில் இடம்பெற்ற ‘கண்கள் இரண்டால்’ என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்றது. தற்போது  இத்திரைப்படத்தைப் பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதனை இயக்குனர் அமீர் தற்பொழுது இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

‘பருத்திவீரன்’ திரைப்படத்தை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் அமீர். இவர் பருத்திவீரன் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் போதே’ சுப்ரமணியபுரம்’ படத்தை தயாரிப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்கள் அமீரால் திரைப்படத்தை தயாரிக்க முடியவில்லை.

எனவே இந்த வாய்ப்பு நடிகரும் இயக்குனருமான சசிகுமாரை அடைந்தது. தற்பொழுது இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அமீர் ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனுதான் என்று கூறியுள்ளார். ஆனால் நடிகர் சாந்தனு  வேறு ஒரு தயாரிப்பாளிடம் முன்பணம் வாங்கி விட்டதால் அவரால் இத்திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து ‘சுப்பிரமணியபுரம்’ பட வாய்ப்பு இழந்ததை நினைத்து தற்போதும் கூட சாந்தனு வருத்தப்பட்டதாகவும் தெரிவித்த அவர், அதன் பிறகு தான் இதில் நடிகர் ஜெய் ஒப்பந்தம் செய்து சசிகுமார் நடித்து  ‘சுப்பிரமணியபுரம்’ திரைப்படம் உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திரைப்படத்தை பார்த்து ‘நானே அசந்து போய் விட்டேன்’ என்றும்  கூறியுள்ளார் இயக்குனர் அமீர். தற்போது இத்தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

Vaaimai Press Meet Photos