‘அந்நியன்’ படத்தில் நடிகை சதாவுக்கு டப்பிங் கொடுத்தது இந்த பிரபல நடிகையா?… வைரலாகும் வீடியோ…

தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. இதே படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்தார். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எதிரி ,வர்ணஜாலம், பிரியசகி, திருப்பதி, அன்னியன், உன்னாலே உன்னாலே உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

   

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தியவர். சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில் தற்போது நடிகை சதா சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்பொழுது நடுவராக செயல்பட்டு வருகிறார். 38 வயதை கடந்தும் நடிகை சதா இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஜெயம் திரைப்படத்திற்கு பிறகு அந்நியன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் நடிகை சதா. அந்நியன் திரைப்படத்தில் நடிகை சதாவின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதுபோல அவரது அழகும் பல மடங்கு கூடி இருந்தது என்றே கூறலாம்.

தற்பொழுது அந்நியன் திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது அந்நியன் திரைப்படத்தில் நடிகை சதாவிற்கு டப்பிங் பேசியவர் யார் தெரியுமா? அவர் வேறு யாரும் இல்லை. பிரபல சீரியல் நடிகை கன்னிகா தான்.

இவர் தற்போது ‘எதிர்நீச்சல்’ சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இவர் பிரபல சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அந்நியன் திரைப்படத்தில் நடிகை சதாவிற்கு ஒரு வசனத்தை பேசுவதற்காக மிகவும் சிரமப்பட்டதாக கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ….