நம்ம கேப்டன் விஜயகாந்த்தா இவர்?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாரே… ஷாக்கான ரசிகர்கள்… புகைப்படம் இதோ….

நடிகர் விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் தனது ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த இவர் தற்பொழுது உடல்நல குறைவால் ஓய்வெடுத்து வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் சினிமாவை விட்டு விலகி அரசியலில் களம் இறங்கினார்.

   

இவர் தேமுதிக என்ற கட்சியை ஆரம்பித்து வந்த கட்சியில் சிறப்பாக செயல்படுத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைவு ஏற்படவே தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் நடிகர் விஜயகாந்த். இவர் தற்பொழுது வீட்டிலேயே ஓய்வெடுத்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் எப்பொழுது மீண்டும் கம்பீரமான கேப்டன் ஆக வருவார் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன்  எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இவரது மனைவி கட்சிப் பணிகளை கவனித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது நடிகர் விஜயகாந்த் பற்றிய செய்திகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது . இந்நிலையில் இன்று புத்தாண்டு வாழ்த்து கூறும் வகையில் தனது தொண்டர்களை சந்திக்க தேமுதிக அலுவலகம் வந்துள்ளார் நடிகர் விஜயகாந்த்.

அப்பொழுது எடுக்கப்பட்ட விஜயகாந்தின் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.  ஏனென்றால் நடிகர் விஜயகாந்த் அந்த  புகைப்படத்தில் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு எழும்பும் தோலுமாய் மாறியுள்ளார்.