நம்ம சமந்தாவா இது?…. திருமண கோலத்தில் வெளிவந்த அழகான புகைப்படம்… எவ்வளவு அழகா இருக்காங்க?… இதோ பாருங்க…

நடிகை சமந்தா திரைப்பயணத்தின் ஆரம்ப காலத்தில் துணை வேடங்களில் நடித்த சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் தற்பொழுது டாப் நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவரும் அறிந்த ஒன்று.

   

பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த இவர்கள் 2021 இல் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து முடிவை அறிவித்தனர். இதை தொடர்ந்து தற்பொழுது வரை  இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நடிகை சமந்தாவின் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

தற்பொழுது நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும்  அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி சகுந்தலம் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. நடிகை சமந்தா தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கிய காலகட்டத்தில் ஒரு சில துணை கதாபாத்திரங்களிலும் விளம்பரங்களிலும் நடித்திருந்தார். இந்த புகைப்படங்கள் அவ்வப்பொழுது  இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது .

அந்த வாழ்க்கையில் மு கருணாநிதி எழுத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி 2010ல் வெளிவந்த பாடல் செம்மொழியான தமிழ் மொழியாம். இந்த பாடல் வீடியோவை இயக்குனர் கௌதம் என இயக்கியிருந்தார். இப்பாடல் ரிலீஸ் ஆன நாள் முதல் நல்ல வரவேற்பு பெற்றது. இப்பாடலில் பல நட்சத்திரங்கள் நடித்தும், பல நட்சத்திர பாடகர்கள் பாடியும் இருந்தனர்.

அதில் ஒருவர் தான் நடிகை சமந்தா நடிகை சமந்தா திருமணமாகி வீட்டிற்கு வரும் மணப்பெண் கோலத்தில் இப்பாடலில் நடித்துள்ளார். இந்த காட்சியின் புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.