நம்ம ‘சூப்பர் சிங்கர்’ சிவாங்கியா இது?… ஹீரோயினா மாறி இப்படி ஜொலிக்கிறாங்களே… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ…

‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சிவாங்கி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சிவாங்கி. இவர் தனது குரலால் அதிகம் கலாய்க்கப்பட்டார். ஆனால் போட்டி என்று வந்துவிட்டால் கில்லியாக நின்று பாடி அசத்தி விடுவார். இதை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று இவர் செய்த அட்ராசிட்டிகள் ஏராளம்.

   

இதன் மூலம் இவர் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். சின்னத்திரையின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற சிவாங்கி, இதன் மூலம் தற்பொழுது வெள்ளி திரையிலும் கால் பதித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘டான்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் நடிகையாக கால் பதித்து ஜொலித்து வருகிறார் நடிகை சிவாங்கி.

இதை தொடர்ந்து வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் தற்போது நடித்துக் கொண்டு வருகிறார். இதோடு மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் தற்பொழுது ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை சிவாங்கி. இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பரதநாட்டிய போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்’ நம்ம சிவாங்கியா இது? ஆள் அடையாளமே தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவரின் புகைப்படம்….