நடிகர் ஜெயம் ரவியா இது?… தாடியெல்லாம் நரைத்துப்போய் இப்படி மாறிட்டாரே… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்… ஷாக்கான ரசிகர்கள்….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் நடித்த ‘ஜெயம்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களால் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் இயங்குனர் மணிரத்தினத்தின் கனவுபடமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

இத்திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் நடிப்பில் இறைவன் மற்றும் சைரன் என்ற இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இதில் இறைவன் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இதில் ஜெயம் ரவி நரைத்துப் போன தாடியுடன் காணப்படுகிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இப்புகைப்படம் தற்போது படு வைரல் ஆகி வருகிறது.

வைரலாகும் அந்த புகைப்படம் இதோ ….