‘குருவி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகையா இவர்?… ஆள் அடையாளமே தெரியலையே… லேட்டஸ்ட் புகைப்படம் இதோ…

குருவி, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஷாதிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘வீர நடை’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஷாதிகா.  இதைத் தொடர்ந்து ரோஜாவனம், ராமச்சந்திரன், சமஸ்தானம், ஆனந்தம் என பல திரைப்படங்களில் நடித்தார். கொஞ்சம் வளர்ந்ததும் தற்பொழுது உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித் போன்றவர்களின் படத்தில் அவர்களுக்கு தங்கையாக நடித்துள்ளார்.

   

நடிகர் விஜயுடன் ‘குருவி’ திரைப்படத்திலும், ‘மாசிலாமணி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்பொழுது வரை கிட்டத்தட்ட 30 படங்களுக்கும் மேல் நடித்துள்ள இவர் தனது திரை பயணத்தின் ஆரம்பத்தில் சுட்டி டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றினார்.

இவரது குரலுக்கென்று ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக்குடன் நான் மகான் அல்ல திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். பாயும் புலி, நெஞ்சில் துணிவிருந்தால், ஏஞ்சலினா என பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் நடித்த ‘என் வீடு முற்றத்தில் ஒரு மாமரம்’ என்ற திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை சாதிகா.

இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகை சாதிகாவா இது? ஆள் அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.