நடிகை ரோஜா நடித்த ‘பொட்டு அம்மன்’ திரைப்பட வில்லனா இது?… இவ்வளவு ஹேன்சமா இருக்காரே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ரோஜா. ரஜினி, அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்பொழுது இவர் அரசியலில் களமிறங்கி, அரசியல்வாதியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

   

நடிகை ரோஜாவின் திரை பயணத்தில் 100வது படமாக வெளிவந்த திரைப்படம் ‘பொட்டு அம்மன்’. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பொட்டு அம்மன் திரைப்படத்தை இயக்குனர் விக்ரமன் இயக்கியிருந்தார். நடிகை ரோஜா கிளாமர் மட்டுமின்றி, பக்தியிலும் புகுந்து விளையாடுவார் என்பதை இத்திரைப்படம் நிரூபித்தது.

இந்த பொட்டு அம்மன் திரைப்படத்தில் கொடூரமான வில்லன் கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் வருவார். இந்த முகத்தை தற்போது பார்த்தாலும் பயம் வரும். அந்த அளவிற்கு இந்த வில்லன் மிகவும் கொடூரமாக நடித்திருப்பார். அவர் வேறு யாருமில்லை. நடிகர் சுரேஷ் பாலா தான். மலையாள சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுரேஷ் பாலா.

இவர் நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். தற்பொழுது இவரின் புகைப்படம் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘பொட்டு அம்மன் திரைப்படத்தில் நடித்த வில்லன் நடிகரா இவர்?’ என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அவரின் புகைப்படம்….