90ஸ் முன்னணி நடிகை சங்கவியின் மகளா இது?… எவ்வளவு க்யூட்டா இருக்காங்க… வைரலாகும் வீடியோ இதோ…

தமிழ் திரையுலகின் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை சங்கவி. இவர் தனது 16 வது வயதில் அஜித்தின் ‘அமராவதி’ படத்தில் நடித்து  பிரபலமானார். இப்படத்தின் மூலமாகவே அவர் தமிழில் அறிமுகமானார்.  தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய நடிப்பின் திறமை கொண்டு எண்ணற்ற படங்களில் நடித்துள்ளார் .

   

விஜய் ,அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். வெள்ளித்திரையில் நடித்துக் கொண்டிருந்த சங்கவி பட வாய்ப்புகள் குறைந்த உடன் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.  கோகுலத்தில் சீதை, சாவித்திரி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

நடிகை சங்கவியின் குடும்ப வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது, இவர் வெங்கடேஷ் என்பவரை 2016ல் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தை தொடர்ந்து திரை உலகை விட்டு விலகிய இவருக்கு 2020ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. நடிகை சங்கவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

இவர் தனது  குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களையும் ,வீடியோக்களையும் அவப்பொழுது இணையத்தில் பதிவு செய்து வருகிறார் .அந்த வகையில் தற்பொழுது அவர் தனது மகளுடன் இருக்கும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வீடியோ…