அடடே.. இவர்தான் ‘மன்னன்’ பட நடிகை விஜயசாந்தியின் கணவரா?… இதுவரை பலரும் பார்த்திடாத அரிய புகைப்படம் இதோ…

நடிகை விஜயசாந்தி தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அரிதான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

சினிமா உலகில் நயன்தாராவிற்கு முன்பு தென்னிந்தியாவின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. இவர் ஏராளமான ஆக்சன் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர்களுக்கும் இணையாக சண்டை காட்சிகளிலும் மிரட்டி உள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

   

இவரது படத்திற்கு எனவே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகை விஜயசாந்தி தேசிய விருது, ஃபிலிம் ஃபேர் விருது, ஆந்திர மாநில அரசின் நந்தி விருது ,தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம் ஃபேர் விருது என பல விருதுகளை வென்று குவித்துள்ளார். நடிகை விஜயசாந்தி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு சிலகாலம் அரசியலில் ஈடுபட்டார்.

இவர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் 2004ல் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். தற்பொழுது இவர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக பிரச்சாரக் கூட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இவரது திருமண வாழ்க்கையை பற்றி பார்க்கும் பொழுது 1988ல் ஆந்திராவைச் சேர்ந்த எம் பி ஸ்ரீனிவாச பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது நடிகை விஜயசாந்தி தனது கணவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ அவரது கணவரின் புகைப்படம்….