‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிகர் அர்ஜுனின் புதிய லுக் இதுதானா?… செம மாஸாக உள்ளாரே… இதோ பாருங்க…

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தளபதி 66 அதாவது வாரிசு திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.  இத்திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது.

   

இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து  அசத்தியுள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷியாம் என ஒரு நட்சத்திர பட்டாளமே இத்திரைப்படத்தில் நடித்துள்ளது. வாரிசு திரைப்படம் தற்பொழுது 250 கோடியும் தாண்டி வசூலித்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது.

இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 67’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இத்திரைப்படத்தில் வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்திற்காக நடிகர் அர்ஜுன் புதிய லுக்கில் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் லைக்ஸ்களை குவித்து வைரலாக்கப்பட்டும் வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….