சந்திரமுகி 2வில் வேட்டையன் இவர்தானா?… இணையத்தில் லீக் ஆன ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் உள்ளே…

இயக்குனர்  பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, வடிவேலு, நயன்தாரா, ஜோதிகா என பல பிரபலங்கள் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆன படம் தான்  சந்திரமுகி. இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடித்துக் கொண்டு வருகிறார் .’சந்திரமுகி 2′  திரைப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்கிறார்.

இப்படத்தினை ‘சந்திரமுகி’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் பி வாசு இயக்குகிறார். பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு & தோட்டா தரணி கலை இயக்குனர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

   

இப்படத்தில் நடிகை ராதிகா, நடிகர் வடிவேலு,நடிகர் ரவி மரியா, மனோபாலா, பிரபல மலையாள நடிகை மஹிமா நம்பியார் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரபல முன்னணி நடிகை கங்கனா ரனாவத் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.  இத்திரைப்படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதைப் போல சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் இணையத்தில் அவ்வபொழுது கசிந்து வருகிறது. சமீபத்தில் கங்கனா,  ராகவா லாரன்ஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருந்தார். இதை தொடர்ந்து சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா மற்றும் கங்கனாவின் புது லுக் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது இருக்கும் சந்திரமுகி கதாபாத்திரத்திலும், ராகவா வேட்டையன் கதாபாத்திரத்திலும் நடிப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.ர் எனவே இதை பார்க்கும் பொழுது சந்திரமுகி 2 திரைப்படம் சந்திரமுகி முதல் பாகத்தின் பிளாஸ்பேக்காக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.