சூரியின் ‘விடுதலை’ திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா?… தீயாய் பரவும் தகவல் உள்ளே…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. ஹீரோ தான் என்று இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் துணிந்து நடிப்பதால் அவர் கை நிறைய படங்கள் இருக்கிறது. இவர் தனது ரசிகர்களால் அன்போடு ‘மக்கள் செல்வன்’ என்று அழைக்கப்படுகிறார். இவர் நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் இவர் நடிப்பு அவ்வளவாக மக்கள் மத்தியில் அறியப்படவில்லை.

   

ஆனால் தற்பொழுது இவர் தனது நடிப்பு திறமையால் அசுர வளர்ச்சி அடைந்துள்ளார். இவர் தற்பொழுது அதிகமாக வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த விக்ரம், காத்து வாக்கு ரெண்டு காதல் போன்ற  திரைப்படங்கள் வெற்றிகரமான படங்களாக அமைந்துள்ளது. இவர் தற்பொழுது வில்லன் மற்றும் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு ,ஹிந்தி போன்ற பல மொழி திரைப்படங்களிலும் கால் பதித்து நடித்து அசத்தி வருகிறார்.இவர் தற்பொழுது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமின்றி காந்தி டாக்ஸ், விடுதலை போன்ற பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் விடுதலை. சூரி முதல் முறையாக கதாநாயகனாக நடித்துள்ள இப்படம் வருகிற மார்ச் 31ஆம் தேதி வெளியாகிறது.  

இப்படத்தில் சூரியுடன் இணைந்து விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் பெருமாள் வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.