மருமகளால் ரெண்டான குடும்பம்… அவனுக்கு கல்யாணமே பண்ணிருக்கக்கூடாது.. போச்சு.. ஜடேஜா தந்தை வேதனை…!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரராக திகழ்ந்துவரும் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் மருமகள் குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக திகழும் பிரபல வீரர் ரவீந்திர ஜடேஜாவிற்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் ரிவாபா என்பவரோடு திருமணம் நடைபெற்றது. ரிவாபா பாஜகவின்  எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் ஜடேஜாவின் தந்தை அனிருத் சிங் தன் மருமகள் குறித்து கூறியிருப்பதாவது, நாங்கள் ஜடேஜா மற்றும் அவரின் மனைவியோடு எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்கிறோம்.

   

அவருக்கு திருமணம் நடந்து இரண்டு மூன்று மாதங்களிலேயே அப்படித்தான் இருக்கிறோம். தனியாக பங்களா ஒன்றில் ஜடேஜா வாழ்ந்து வருகிறார். ஒரே ஊரில் இருக்கும் நாங்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்வதில்லை. அவரின் மனைவி ஜடேஜாவை என்ன செய்தார்? என்று தெரியவில்லை.

அவருக்கு திருமணமே நடத்தி வைத்திருக்கக் கூடாது. அவர் கிரிக்கெட்டில் சென்றிருக்கவே கூடாது. திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில் அனைத்து சொத்துக்களையும் அவர் பெயரில் எழுதி வாங்கி விட்டார். குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தி விட்டார். குடும்பமாக வாழ்வதைவிட தனியாக இருப்பதை தான் அவர் விரும்பினார்.

வெறும் வெறுப்பு மட்டுமே அவரிடம் உள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக என் பேத்தியை நான் நேரில் பார்த்ததே இல்லை என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். தன் தந்தையின் குற்றச்சாட்டுகளை மொத்தமாக மறுத்திருக்கும் ஜடேஜா, அவர் கூறியது எதுவுமே உண்மை கிடையாது எனவும் என் மனைவி மீது இருக்கும் நற்பெயரை கெடுக்கும் இந்த செயல்களை வன்மையாக எதிர்க்கிறேன் என்று கூறியிருக்கிறார்.