
ஜெயிலர்
ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. நடிகர் ரஜினி மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இருவரும் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முடிவில் கமிட்டான படம் தான் ஜெயிலர். இந்த படத்தில் தமன்னா, மோகன்லால், புனித் ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், யோகி பாபு, ஜாக்கி ஷெரோஃப் என முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருந்தார்.
இதில் வந்த எல்லா பாடல்களும் செம ஹிட்டாகிய நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடலுக்கு திரையரங்கில் நல்ல வரவேற்பு இருந்தது.
வைரல் வீடியோ
இந்நிலையில், முதியவர் ஒருவர் திரையரங்கில் காவாலா பாடலுக்கு நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
???????????????????????????????????????????????????????????????????? pic.twitter.com/f0fOu00ZaF
— Prashanth Rangaswamy (@itisprashanth) August 13, 2023