ஜவான் படம்…. நம்பவைத்து ஏமாற்றிய அட்லீ… ஏமாற்றத்தில் நயன்தாரா… சோகம்…!!

ஜவான்

பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக் கான் நடிப்பில், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கவுரி கான் தயாரித்துள்ள படம் ‘ஜவான்’. இதை அட்லீ இயக்கி உள்ளார். இந்த படத்திற்காக ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெறுகிறது. மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோன், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 100 சதவிகித ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இப்படத்தில் 5 சர்வதேச சண்டை இயக்குனர்கள் பணியாற்றி உள்ளனர்.

Atlee - ஜவான்.. விலை மதிக்க முடியாத அனுபவங்கள்.. அட்லீ நெகிழ்ச்சி | Atlee Thanking to shahrukhkhan for jawan movie - Tamil Filmibeat

   

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த   படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்திற்காக, சென்னையில் தனியாக நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Shah Rukh Khan confirms Nayanthara as his co-star in Jawan, says 'Atlee and I have good chemistry' – Report Wire

ஏமாற்றத்தில் நயன்

இந்நிலையில், இந்த படத்தை எடிட் செய்து முடித்த பின், நடிகை நயன்தாரா பார்த்துள்ளார். அதன் பிறகு, பெரிய வருத்தத்தில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. நடிகை நயன்தாரா இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதால், பின் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை இந்த படம் உருவாக்கி தரும் என மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்துள்ளார்.

சிம்புவால் குடிக்கு அடிமையான நயன்தாரா? இவரால் தான் மீண்டு வந்தாராம்.! - தமிழ்நாடு

ஆனால், இந்த படத்தில் நயன்தாராவிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட அனைத்து சீன்களும், எடிட்டிங்கில் நீக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகை நயன்தாரா பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக தற்போது பேசப்பட்டு வருகின்றது.