ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி பிறந்தநாள்…. வாழ்த்து சொன்ன பிரபலங்கள்…. வைரல் புகைப்படங்கள்…!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. இந்த ஒரு திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நடிகர் ஜெயம் ரவி.

   

அதன் பிறகு எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கேயும் காதல் கொண்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் ஒருவராக வளம் வரும் ஜெயம் ரவி. தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.

இவரின் மனைவி ஆர்த்தி சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் வீடியோக்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருவார்.

அது மட்டும் இல்லாமல் இவர் வெளியிடும் போட்டோ சூட்டுகளை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். ஆர்த்தி நேற்று தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியிருந்தார்.

இவரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய அம்மா சுஜாதா ஜெயக்குமார் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

அது மட்டும் இல்லாமல் நடிகை திரிஷாவும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவருக்கு வாழ்த்துக்களை கூறியிருந்தார். இந்த புகைப்படங்கள் இதோ..