கடந்த 1998 ஆம் வருடத்தில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து வெளியான ஜீன்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அத்திரைப்படத்தில், பிரசாந்த் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். பாடல்கள், காதல் காட்சிகள் என்று அனைத்துமே ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
குறிப்பாக ஏழு அதிசயங்களை ஒரு பாடலை காண்பித்திருப்பார்கள். இயக்குனர் சங்கர் என்றாலே பிரம்மாண்டத்திற்கு குறைவிருக்காது. அந்த வகையில், பட முழுக்கவே பார்ப்பதற்கு சூப்பராக இருக்கும். தற்போது வரை, ரசிகர்களின் விருப்பமான திரைப்படமாக ஜீன்ஸ் அமைந்திருக்கிறது.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, பேட்டி ஒன்றில், இயக்குனர் சங்கர் முதலில் பிரசாந்தின் கதாபாத்திரத்தில் விஜய்யை தான் நடிக்க வைக்க நினைத்தார். அதற்காக அவர் விஜய்யை அணுகிய போது அவர் நடிக்க மறுத்து விட்டார். எனவே, இயக்குனர் சங்கருக்கு அது பெரிய அவமானமாக மாறிவிட்டது.
அந்த சமயத்தில், பிரசாந்த் அவ்வளவு பெரிய கதாநாயகனாக உயரவில்லை. எனினும் அழகான கதாநாயகன் தேவைப்பட்டதால் பிரசாந்தை நடிக்க வைத்தார். வேறு எந்த திரைப்படங்களிலும் இல்லாத வகையில் ஏழு அதிசயங்கள் காண்பிக்கப்பட்டிற்கும் திரைப்படத்தில் பிரஷாந்த் நடித்திருந்தார். ஒவ்வொரு பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டானது. அதன் பிறகு, பிரசாந்திற்கு நல்ல மார்க்கெட் உயர்ந்தது என்று அவர் கூறியிருக்கிறார்.