யார் பணத்தை கொடுக்கீங்க…? உங்க வீட்டு சொத்தா…? அகரம் அறக்கட்டளையின் வண்டவாளங்கள்… நார் நாரா கிழித்த பிரபலம்..!

பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் தெரிவித்திருப்பதாவது, நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தை பாதிக்கப்பட்ட இருளர் சமூகத்தை மையப்படுத்தி தான் எடுத்தார்கள். இருளர் சமூகத்தைச் சேர்ந்த அமைப்பிற்கு அகரம் அறக்கட்டளை சார்பாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

   

ஒரு நபர், அகரம் அறக்கட்டளையிலிருந்து ஒரு கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான ஆதாரத்தை எடுத்து விட்டார். அகரம் அறக்கட்டளையிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு நீங்கள் யார்? என்று அந்த நபர் நியாயமான கேள்வியை முன் வைத்திருக்கிறார். ஒரு அறக்கட்டளை என்பது முழுவதுமாக நடிகர் சூர்யா, சிவகுமார் அல்லது கார்த்தியின் பணம் கிடையாது.

அது மக்களின் பணம். நிறைய பேர் உதவித்தொகை வழங்கி இருப்பார்கள். மேலும், ஆதாரத்தை வைத்திருக்கும் அந்த நபர் தேடிப் பார்த்ததில் இருளர் அமைப்பு என்ற ஒரு அமைப்பே இல்லை. எனவே, அவர்கள் வழங்கிய பணம் அவர்களிடமே திரும்ப வந்துவிடும் என்று செய்யாறு பாலு அவர்கள் தெரிவித்திருக்கிறார்.