நடிகர் விவேக் தன்னைப்பற்றி 7 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பதிவை பகிர்ந்த காஜல்… என்ன சொன்னார் தெரியுமா?….

சன் மியூசிக் தொலைக்காட்சியில் திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை காஜல் பசுபதி. திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் . சன் தொலைக்காட்சியின் கஸ்தூரி தொடரில் வில்லியாக  நடித்திருந்தார். ‘வசூல்ராஜா’ திரைப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடித்துள்ளார் .

   

இவர் டிஷ்யூம், கள்வனின் காதலி போன்ற  திரைப்படங்களில்  நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை திரையுலகில் ஏற்படுத்தி உள்ளார் . இறுதியாக ‘கலகலப்பு 2’ படத்தில் நடித்து இருந்தார். பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக பங்கேற்றார். பிரபல நடன ஆசிரியர்  சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தற்பொழுது நடிகர் விவேக் தன்னைப்பற்றி 7 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட பதிவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் நடிகர் விவேக் ‘காஜல் பசுபதி மிகவும் திறமையான நடிகை. அவருக்கு ஏன் இன்னும் ஒரு மிகப்பெரிய பிரேக் கிடைக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கடின உழைப்பும், உரிமையும், அர்ப்பணிப்பும்  விரைவில் வெல்லும்’ என்று கூறியுள்ளார். இதற்கு காஜல் பசுபதியும் நன்றி தெரிவித்துள்ளார். விவேக் இந்த பதிவை போட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனாலும், காஜலால் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை தற்பொழுது வரை பிடிக்க முடியவில்லை. நடிகர் விவேக்கின் வாக்கு விரைவில் பலித்து காஜல், தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான நடிகையாக வருவாரா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதோ அந்த பதிவு…