அப்துல் கலாமிடம் விருது வாங்கும் குழந்தை… இப்போ தமிழ் சினிமாவின் வாரிசு நடிகர்… யாருனு தெரியுமா…?

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் இளம் நடிகராக அறிமுகமாகி, திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும், பிரபல நடிகர்களை போல் மிமிக்ரி செய்யும் திறமையும் அவரிடம் இருக்கிறது. சமீபத்தில்  அவரின் காதலியுடன் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

   

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற அவர் மறைந்த முன்னாள் பிரதமர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களிடமிருந்து சிறுவயதில் தான் வாங்கிய விருது குறித்து பேசியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, அந்த விருதை வாங்கியதை விட அப்துல்கலாம் சார் அவர்களிடம் இருந்து வாங்கியது தான் பெருமையாக இருந்தது.

மேலும் அவரிடம் சில வார்த்தைகள் பேசுவதற்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்துல் கலாம் போன்ற ஒரு சிறந்த மனிதரிடமிருந்து விருது வாங்கியது பெருமையான விஷயம். அந்த சிறு வயதில் அவ்வளவு பெரிதாக அதை நான் கருதவில்லை. தற்போது அதைப் பற்றி எல்லோரும் பேசும்போது தான் தெரிகிறது என்று கூறியிருக்கிறார். அப்துல் கலாமிடம் காளிதாஸ் ஜெயராம் விருது வாங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.