லண்டனில் ஹோட்டலில் பணியாற்றும் பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட KPY பாலா… என்னாச்சுன்னு தெரியுமா?… விடியோவை வெளியிட்ட புகழ்…

பிரபல காமெடியன்களாக வலம்  வரும் KPY பாலா மற்றும் புகழ் இருவரும் தற்பொழுது லண்டனுக்கு சென்று அங்கு எடுத்த வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா மற்றும் புகழ். பாலா முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

   

இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மற்றொரு நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இந்நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடத்தில் வரவேற்பு பெற்றார்.

இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கி அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார். புகழ் இவரைப்பற்றிய அறிமுகமே  தேவையில்லை.  அந்த அளவிற்கு தனது காமெடியால்  மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார்.

இவர்கள் தற்பொழுது பிரபல காமெடியன்களாக வெள்ளித்திறையில் கலக்கி வருகின்றன.ர் இந்நிலையில் தற்பொழுது இருவரும் லண்டனுக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் தொடர்ந்து வீடியோவாக பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் காலை உணவை சாப்பிட சென்றபோது அவர்களுக்கு இரண்டு முட்டை மற்றும் ஒரு ஆப்பிள் கொடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி பாலா ஏதோ ஹோட்டல் பெண்ணிடம் கேட்க அவர் ஏதோ கூறுகிறார். இதைத் தொடர்ந்து பாலா அவரிடம் மன்னிப்பு கேட்கிறா.ர் இதனை வீடியோவாக எடுத்து புகழ் தற்போது இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது படுவைரலாகி வருகிறது.

வைரலாகும் அந்த வீடியோ இதோ….