அன்று முதல் இன்று வரை….. இந்த நான்கு புகைப்படங்கள்தான் எனது வாழ்க்கை…. திருமண நாளில் குஷ்பூ நெகிழ்ச்சியான பதிவு…

நடிகை குஷ்பூ நேற்று தனது 23 வது திருமண நாளை கொண்டாடியதோடு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

   

தமிழ் திரையுலகில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ.

ரஜினிகாந்த், பிரபு நடித்த தர்மத்தின் தலைவன் என்ற திரைப்படத்தின் அறிமுகமாகி அதன்பிறகு வருஷம் 16, சின்ன தம்பி, மன்னன், சிங்காரவேலன், அண்ணாமலை, பாண்டியன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர்.

சமீபத்தில் கூட விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்தார் என்றாலும் அவரின் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை.

நடிகை குஷ்பூ கடந்து 2000 ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று அவர் தனது 23 வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

இந்நிலையில் காதலிப்பதற்கு முன் காதலிப்பதற்கு பிறகு திருமணத்தின்போது தற்போது வரை என்று நான்கு விதமான புகைப்படங்களை பதிவு செய்த குஷ்பூ இந்த நான்கு புகைப்படத்தில் எங்களது வாழ்க்கை அன்று முதல் இன்று வரை என்றும் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எப்போதும் எனக்கு துணையாய் இருக்கும் எனது கணவருக்கு நன்றி அன்று போல் என்றும் என்னை நேசிப்பதற்கும் நன்றி என்று அவர் நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார்.

நடிகை குஷ்புவின் இந்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.