90-ஸ் ரசிகர்களை ஏங்க வைத்த நடிகைகள் ‘மாளவிகா மற்றும் ரீமாசென்’ தற்போது எப்படி உள்ளார்கள் தெரியுமா?..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளின் ஒருவர் தான் நடிகை மாளவிகா இவர் 1999 ஆம் ஆண்டு வெளியான ‘உன்னை தேடி ‘என்ற திரைப்படத்தின் மூலமாக நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார். இதுவே இவரின் தமிழின் முதல் திரைப்படமாகும். அதைத் தொடர்ந்து இவர் தமிழில் ரோஜா வனம் ,வெற்றிக் கொடி, சந்திரமுகி , வியாபாரி,  திருட்டுப் பயலே போன்ற பல படங்களில்  நடித்துள்ளார்.

   

பிறகு தமிழில் சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு திரைப்படயுலகில் கவனம் செலுத்தி நடித்து வந்தார்.2007 ஆம் ஆண்டு சுரேஷ் என்ற தொழிலதிபரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்  தற்போது மும்பையில் செட்டில் ஆகி உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் தனது குடும்பத்தை  மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவர் நடிகை  ரீமா மற்றும் இவர்  இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்,  தற்போது அந்த புகைப்படம் மாணவி இணையத்தில்  வைரலாகி வருகிறது.