பாத்தியா அந்த பூனைக்கு எவ்வளவு தைரியம்…. எப்படி பைக்ல உட்கார்ந்துட்டு போது பாருங்க….. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

வாகனத்தில் சென்று கொண்டிருந்த நபரின் தோள்பட்டையிலும் முன் பக்கத்திலும் இரண்டு பூனைகள் அமர்ந்து செல்லும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . பொதுவாக மக்கள் தற்போது செல்லப்பிராணிகளை விரும்பி வளர்க்கத் தொடங்குகிறார்கள். வீட்டில் ஒரு நாய் அல்லது பூனை கட்டாயம் இருக்கின்றது. அது செய்யும் அட்ராசிட்டியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து லைக் வாங்கி வருகிறார்கள்.

   

அவை செய்யும் ஒவ்வொன்றும் குறும்புத்தனமாக இருக்கின்றது. அதிலும் நாய், பூனை போன்றவை செய்வது நமக்கு மிகவும் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோ சற்று வித்தியாசமாக உள்ளது. பொதுவாக வாகனங்களில் செல்லும்போது செல்லப்பிராணிகளை ஒரு பையில் போட்டோ அல்லது கூடை போன்ற ஒன்றில் வைத்தோ எடுத்துச் செல்வார்கள்.

ஆனால் இங்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் நபரின் தோள்பட்டையில் ஒரு பூனையும், அவரின் முன் பக்கத்தில் ஒரு பூனையும் அழகாக அமர்ந்து செல்கின்றது. அவர் செல்லும் வேகத்திற்கு சற்றும் பயப்படாமல் பூனை அவ்வளவு தைரியமாக அமர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை நீங்களும் பாருங்கள்…