தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7-ல் பங்கேற்றிருக்கும் போட்டியாளர் மாயா மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். சக போட்டியாளர்களிடம் அவர் நடந்து கொள்ளும் விதம், சண்டையிடுவது என்று தன் பெயரை தானே கெடுத்து வருகிறார். இந்நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்று வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
அதில், தொகுப்பாளினி அவரிடம், விக்ரம் திரைப்படத்தில் நீங்கள் நடித்திருந்த ஒரு காட்சியில் கொடுத்த சத்தத்தை திரும்ப செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறார். அதற்கு மாயா, நீங்கள் யாரையாவது கூட்டிக்கொண்டு எங்கேயாவது போங்கள். அந்த சத்தத்தை லைவாக கேட்கலாம் என்று கூறுகிறார்.
உடனே, அந்த தொகுப்பாளினி உங்களிடம் தான் அந்த சத்தத்தை கேட்க விரும்புகிறோம் என்று கூறியவுடன், அப்போது எனக்கு பணம் அனுப்புங்கள். அந்த சத்தத்தை தருகிறேன். நான் ரொம்ப எக்ஸ்பன்ஸிவ் ரஸ் என்று கூறுகிறார் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது