
நம் உயிரே காப்பாற்றும் மருத்துவர்கள் என்ன கூறுகிறார்களோ, அதை தான் நாம் நம்புவோம். மருத்துவர்களாலும் குணப்படுத்த முடியாத சில கொடூர நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. அதுபோன்ற நிகழ்வுகளில் இயற்கையாகவே தானாக நோய் சரியாகும் நிகழ்வை மெடிக்கல் மிராக்கள் என்று மருத்துவ உலகில் கூறுவார்கள்.
அது போன்ற ஒரு நிகழ்வு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் வாழ்விலும் நடந்திருக்கிறது. அதாவது எம்.ஆர் ராதா, எம்ஜிஆர் அவர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது. தற்போது வரை அதில் உள்ள மர்மம் நீடித்துக் கொண்டிருக்கிறது.
அந்த சமயத்தில், எம்ஜிஆரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவருக்கு என்ன நடந்தது? என்று தெரியாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனை வாசலில் குவிந்து கிடந்தார்கள். மருத்துவர்களும் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர். எனினும், துப்பாக்கி குண்டை வெளியில் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.
ஏனெனில், அந்த குண்டு அவரின் தொண்டை மற்றும் கழுத்திற்கு இடைப்பகுதியில் இருந்து இருக்கிறது. அதனை, அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுப்பது கடினமாக இருந்ததால், மருத்துவர்கள் தடுமாறி உள்ளனர். அந்த நேரத்தில், ஒரு பெண் சாமியார், எம்ஜிஆர்க்காக யாகம் நடத்தியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், முள்ளின் மீது அமர்ந்து தவம் மேற்கொண்டு இருக்கிறார். அதை தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று எம்ஜிஆர்க்கு விபூதி பூசி விட்டுள்ளார். அந்த சமயத்தில், எம்ஜிஆர் திடீரென்று தும்மி இருக்கிறார். அந்த புல்லட் இருந்த இடத்திலிருந்து சிறிது நகர்ந்து விட்டது. அதன் பிறகு, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த குண்டை அகற்றி விட்டார்களாம். அதன்பிறகு, எம்ஜிஆர் ஆபத்திலிருந்து மீண்டு உடல் நலம் தேறிவிட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது.