‘என்னுடைய மகள் எம் பி பி எஸ்… வெற்றிமாறன் படிக்காததற்கு காரணம் இதுதான்’… பகீர் பேட்டியளித்த இயக்குனர் வெற்றிமாறனின் தாயார்…

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் அவர்கள் தான். ஏனென்றால் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் மெகாஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் விருதுகளை வாரியும் குவித்துள்ளது.

   

அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் முதன்முதலாக வெளியாகிய ‘பொல்லாதவன்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை தழுவியது. அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

அதேபோல் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம்  பல விருதுகளையும் வென்றது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். அதனால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தை முழுவதுமாக முடிந்து விட்டு அடுத்ததாக சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில் வெற்றிமாறனின் தாயார் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

அதில் தன்னை பற்றியும் தன்னுடைய மகள் மற்றும் மகனைப் பற்றியும் கூறினார். அவர் கூறியதாவது, என்னுடைய குடும்பத்தில் நான்தான் முதன் முதலில் படித்து வேலைக்கு சென்ற முதல் பெண். என்னுடைய மகள் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைபட்டேன்.

என்னுடைய மகள் தற்போது மருத்துவராக எம்பிபிஎஸ் டிமார்ட்டில் இருக்கிறார். ஆனால் வெற்றிமாறன் மட்டும் படிக்காததற்கு காரணம் அவனுடைய விருப்பம்தான். நான் பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டு தான் எதையும் செய்வேன்’ என்று கூறியுள்ளார் அவரது தாயார் மேகலா சித்ரவேல்.