‘என்னோட அம்மாவுக்கு புற்றுநோய்’… வீடியோ வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்திய பிக் பாஸ் நடிகை… ஆறுதல் கூறும் ரசிகர்கள்…

ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ராக்கி சாவந்த் தற்பொழுது தனது அம்மா பிரைன் டியூமரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அழுதபடி வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

தமிழில் ஒரு சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியவர் நடிகை ராக்கி சாவந்த். இவர் ஹிந்தியில் சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருகிறார். மல்யுத்த போட்டியில் கலந்து கொண்டு முதுகை உடைத்துக் கொண்டது, நடிகை மீது செக்ஸ் புகார் என்று இவர் கிளப்பிய சர்ச்சைகள் ஏராளம். தற்போது இவர் தனது அம்மாவின் உடல்நிலை குறித்து வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

   

இவர் ஹிந்தியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் சீசன் 1, சீசன் 14 மற்றும் சீசன் 15 போன்றவற்றில் கலந்து கொண்டார். இவர் கடந்த வருடம் ரிதேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் தனது கணவர் ரிதேஷ் உடன் இணைந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.இவரை போல ஒரு அற்புதமான கணவர் யாருக்கும் கிடைக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த சில மாதத்திலேயே தனது கணவரை விட்டு பிரிந்தார். தற்பொழுது இவர் ஆதில் கான் துரானி என்பவரை காதலித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தார். டாப் 5 போட்டியாளர்களில் ஒருவராக வந்தார் நடிகை ராக்கி சாவந்த்.

இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற தனக்கு வாய்ப்புகள் குறைவு என்பது தெரிந்து கொண்டு 9 ரூபாய் லட்சம் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஜனவரி 8-ம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ராக்கி சாவந்த் தற்பொழுது அழுதபடி வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் ‘என் அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர் குணமடைய அனைவரும் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்றும் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.