அடேங்கப்பா…! சுந்தரம் ஐயங்கார் தொடங்கி நாசர் வரை… நடிகர் சங்க தலைவர்கள் யார் யார்லா தெரியுமா…?

தமிழ் திரையுலக வரலாற்றில் நடிகர் சங்க தலைவர்களாக இருந்தவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், முதன் முதலில் 1952 ஆம் வருடத்தில் டி.வி சுந்தரம் ஐயங்கார் தான் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தார். அவரை தொடர்ந்து, 1956-ஆம் வருடத்தில் வி.நாகய்யா இருந்திருக்கிறார்.

   

அதன்பிறகு, 1957 ஆம் வருடத்தில் என்.எஸ் கிருஷ்ணன், அவரை தொடர்ந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். 1959 ஆம் வருடத்தில் நடிகை அஞ்சலிதேவி அவர்கள்.

அவருக்கு பின் 1960 ஆம் வருடத்தில் நடிகர் ராகவேந்திர ராவ். அதன் பிறகு மீண்டும் 1961 ஆம் வருடத்தில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள். அவருக்கு பின் 1963 ஆம் வருடத்தில் நடிகர் எஸ் எஸ் ராஜேந்திரன்.

அதனை தொடர்ந்து 1967 ஆம் வருடத்தில் நடிகர் கே .ர் ராமசாமி. அவருக்கு பின் கடந்த 1971 ஆம் வருடத்தில் நடிகர் சிவாஜி கணேசன். அதன் பிறகு, 1977 ஆம் வருடத்தில் நடிகர் வி.கே ராமசாமி அவர்கள். அவருக்கு பின்னர் அதே வருடத்தில் மீண்டும் நடிகர் சிவாஜி கணேசன்.

அதனை தொடர்ந்து 1985 ஆம் வருடத்தில் நடிகர் ராதாரவி அவர்கள். அதன்பிறகு, 2000 ஆம் வருடத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். அதன் பிறகு 2006-ஆம் ஆண்டில் நடிகர் சரத்குமார், அவருக்கு பின் 2015 ஆம் வருடத்திலிருந்து தற்போது வரை நடிகர் நாசர் நடிகர் சங்க தலைவராக இருக்கிறார்.