
இணையதளங்கள் மூலமாக வைரலாகும் வீடியோக்கள் சில எதிர்மறையான விமர்சனங்களை பெறுகிறது. மேலும், பலரும் தங்களுக்கு என்று தனியாக யூடியூப் சேனல்களை தொடங்கி தங்கள் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை வீடியோக்களாக பதிவிடுகிறார்கள். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சில விமர்சித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.
எனினும், சமூக வலைதளங்கள் ஒரு மனிதரின் ஏற்றத்திற்கு மிக அதிக அளவில் வழிவகைத்து விடுகிறது. அந்த வகையில், சமூக வலைதளம் மூலம் ட்ரெண்டான டோனி சாயிவாலா என்ற நாக்பூரை சேர்ந்த டீக்கடைக்காரர் பற்றி பார்ப்போம். டோனி சாய்வாலா நாக்பூரில் சுமார் பத்து வருடங்களாக டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரின் சிறப்பு என்னவென்றால், மற்ற டீக்கடைக்காரர்களைப் போன்று இல்லாமல் மிகவும் மாடர்னான உடை அணிந்து வித்தியாசமான முறையில் டீ போடுகிறார். இவர் பாலை ஊற்றும் ஸ்டைலே தனி தான். இணையதளங்களில் இவரின் வீடியோக்களை அடிக்கடி பதிவிட்டு பலரும் கலாய்த்து வந்தனர்.
ஆனால், அதுவே அவருக்கு நல்ல முன்னேற்றத்தை கொடுத்துவிட்டது. அதாவது, உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் அவரின் டீக்கடைக்கு சென்று டீ வாங்கி குடித்திருக்கிறார். இதனால் அவர் மேலும் பிரபலமாகி தற்போது வேற லெவலில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.