நடிகை நந்திதா ஸ்வேதா தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறார். இதன் மூலமாக தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு பரிச்சியமான ஒரு நடிகையாக உள்ளார் இவர்.
அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நந்திதா ஸ்வேதா. இந்த படத்தில் எதார்த்தமான ஒரு நடிப்பை வெளிக்காட்டி இருந்தார் இவர். இந்த படம் இவருக்கு ஒரு தொடக்கத்தை தனது என்று சொல்ல்லாம்.
மேலும், அட்டகத்தி படத்தினை தொடர்ந்து எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி, கலகலப்பு-2, தேவி-2 போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை நந்திதா.
மேலும், நடிகை நந்திதாவின் ‘டானா’ என்ற புதிய படம் வெளிவர உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சமூக வலைத்தளத்தில் டைட்டான ஜிம் ஷார்ட்ஸில் இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.