சொந்தமாக ஜெட் விமானம் வைத்திருக்கும் ஒரே தென்னிந்திய நடிகை நயன்தாரா…. எத்தனை கோடி தெரியுமா?.. அடடே இவ்வளவு!!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ஏராளமான படங்களின் நடித்துள்ளார். சினிமாவில் ஒரு படம் நடித்தால் வழக்கமாக செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளது. அதனை செய்து காட்டாமல் சக்சஸ் காட்டி வருகிறார். தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்.

   

பின்பு தெலுங்கு, மலையாளம் என எண்பதற்கும் மேற்பட்ட  படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் படம் ‘ஜவான்’ இப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்துள்ளார். முதல் முறையாக பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் நடிகை நயன்தாரா .

படங்களை நடிப்பதை தாண்டி நயன்தாரா நிறைய தொழில்களையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.நடிகை நயன்தாரா பிரைவேட் ஜெட் விமானத்தை வைத்துள்ளார், அதன் சில புகைப்படங்களும் இதற்கு முன் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.

ஜெட் விமானத்தை வைத்திருக்கும் எலைட் நடிகைகளின் குழுவில் நயன்தாராவும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகை நயன்தாரா வைத்திருக்கும் ஜெட் விமானத்தின் மதிப்பு ரூ. 50 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.ரூ.1.76 கோடி மதிப்புள்ள BMW 7 சீரிஸ், ரூ.1 கோடி மதிப்புள்ள Mercedes GLS350D மற்றும் BMW 5 சீரிஸ் போன்ற பல உயர் ரக சொகுசு கார்களை அவர் சொந்தமாக வைத்துள்ளார்.