நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த மெகா பரிசு.. ரஜினிக்கு வழங்கியதை விட பல மடங்கு விலை மதிப்புள்ள பரிசு… வைரல் வீடியோ இதோ…!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி, முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் 375 கோடி வசூல் செய்தது. மேலும் தற்போது வரை 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே இதன் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினியின் திறமையால் வெற்றி பெற்றதால், நேற்றைய பிஎம்டபிள்யூ X7 காரை பரிசாக வழங்கினர். இந்த காரின் விலை சுமார் 1.25 கோடி ஆகும்.

   

இயக்குனர் நெல்சன்

நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாக படுதோல்வி அடைந்த நிலையில், வசூல் ரீதியாக ஓர் அளவுக்கு தன்னுடைய ஓட்டத்தை முடித்துக் கொண்டது. ஆனால் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் குறைவான பொருட்செலவில் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தின் திரைக்கதை படத்தை பிளாக்பஸ்டர் ஹிட்டாக்கி வசூலில் சாதனை படைத்தது.

மேலும் இப்படம் இயக்குனர் நெல்சனுக்கு மிகப்பெரிய கம் பேக் கொடுத்து இருக்கிறது எனவும், தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தையும் கொடுத்திருக்கிறது எனவும் கூறலாம். அந்த வகையில் பொதுவாக திரைப்படங்கள் வெற்றி பெற்று, அதிகப்படியான லாபம் வரும் போது படத்தின் தயாரிப்பாளர் இயக்குனருக்கு கார் அல்லது தங்க நகைகளை பரிசாக வாங்கி கொடுப்பது வழக்கமாகும்.

எனவே ஜெயிலர் படம் பிரம்மாண்ட வெற்றியை கொடுத்த நிலையில், இயக்குனர் நெல்சனை தயாரிப்பு நிறுவனம் நேரில் சந்தித்து, காசோலையை கொடுத்த பின், புத்தம் புதிய போர்ஷே காரை பரிசாக வழங்கினார். இந்நிலையில் ரஜினிக்கு வழங்கிய காரை விட நெல்சனுக்கு வழங்கிய காரின் மதிப்பு பல மடங்கு அதிகமாகும். அந்த வகையில் இதன் விலை சுமார் 1.40 கோடிக்கு அதிகம் என்று கூறப்படுகிறது . தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ வீடியோ,