‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அதிரடியாக களமிறங்கும் 90’ஸ் பிரபல நடிகர்… பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான ப்ரோமோ இதோ…

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியல் தற்போது பரபரப்பாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டுள்ளது. இந்த சீரியல் தற்போது விஜய் தொலைக்காட்சியின் டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் தற்போது பாக்கியலட்சுமி மிகப்பெரிய கம்பெனியின் கேட்டரிங் ஆர்டரை கைப்பற்றியுள்ளார்.

   

இந்த மகிழ்ச்சியில் பாக்கியலட்சுமி ஒரு புறம் இறுக்க, மற்றொரு புறம் கோபி தனது மனைவி ராதிகாவிடமும், மகள் இனியாவிடமும் படாதபாடுபட்டு வருகிறார். ஒரே நேரத்தில் இனியா மற்றும் மயூ என இருவரும் கோபியை கூப்பிட எங்கு போவது என தெரியாமல் தவிக்கிறார்.

அதன் பின்னர் இனியா குறைந்த விலையில் சைக்கிள் எடுக்க, ‘இதைவிட நல்லதா பிராண்ட்ல பாரு. பிராண்டாக எடுத்தால்தான் ரொம்ப நாளைக்கு நல்லா ஓடும்’ என சொல்ல, இதைக் கேட்ட ராதிகா ஏற்கனவே சூஸ் செய்து வைத்திருந்த சைக்கிளை வைத்துவிட்டு ஃபாரின் பிராண்ட் சைக்கிளை எடுக்கிறார்.

பின்னர்  கோபி அந்த சைக்கிளை வந்து பார்க்க விலை 27 ஆயிரம் ரூபாய் என இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். ‘விலை இவ்வளவு அதிகமா இருக்கு?’ என கேட்க ராதிகா ‘இனியாவுக்கு மட்டும் நல்ல பிராண்டா எடுக்க சொல்றீங்க?’ என சொல்ல, கோபி எதுவும் பேச முடியாமல் ‘நல்லா தான் இருக்கு எடுத்துக்கோங்க’ என சொல்லி புலம்பிக்கொண்டே இருவருக்கும் பில் பே பண்ணுகிறார்.

இந்நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் புதிதாக ஹீரோ ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். இவர் தான் பாக்கியாவுக்கு இனி ஜோடி ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். அவர் வேறு யாருமில்லை. 90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ரஞ்சித் தான்.

இவர் ஏற்கனவே ‘செந்தூரப்பூவே’ எனும் சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்பொழுது இந்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ…