அந்த இயக்குனருடன் திருமணம்… வாழ்வின் கசப்பான பக்கங்கள்… கண்ணீர் பேட்டி அளித்த பிரபல நடிகை…!

தமிழ் திரையுலகில் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மறைந்த இயக்குனர் மகேந்திரன். இவர் நடிகை பிரேமியை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். ஆனால், சில வருடங்களில் இருவரும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில், சமீபத்தில் நடிகை பிரேமி அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது, மகேந்திரனை மறைந்த நடிகர் செந்தாமரைத்தான் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

உதிரிப்பூக்கள் திரைப்படத்தில் நாங்கள் இணைந்து பணிபுரிந்த போது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர், என்பதை அறிந்தும் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஏழு வருடங்கள் என்னோடு வாழ்ந்து விட்டு மீண்டும் முதல் மனைவியோடு சேர்ந்து விட்டார்.

   

அந்த சமயத்தில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கினேன். தனி ஆளாக என் மகனை வளர்த்து ஆளாக்கியுள்ளேன். அந்த காலகட்டம், என் வாழ்க்கையின் மிகவும் கடினமான பக்கங்கள் என்று கூறியிருக்கிறார்.