பிளாஸ்டிக் பைகளில் எரிவாயு நிரப்பும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ள பாகிஸ்தான்….. இணையத்தில் படு வைரலாகும் வீடியோ….!!!

பாகிஸ்தானில் நடைபெறும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயுவை பெறுவதற்கு மக்கள் அவ நம்பிக்கையான நடவடிக்கைகளை எடுத்து வரும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் மாகாணத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் கையிருப்பு குறைந்துள்ளதால் உள்ளூர் வாசிகள் எல்பிஜியை சேமிக்க பெரிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

   

இந்த பிளாஸ்டிக் பைகள் நாட்டின் எரிவாயு குழாய் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட கடைகளில் இயற்கை எரிவாயு மூலம் நிரப்பப்படுகின்றது . கசிவை தவிர்க்க விற்பனையாளர்கள் பையின் திறப்பு முனையை மற்றும் வாழ்வு மூலம் இறுக்கமாக மூடுகின்றனர். பைகள் பின்னர் மக்களுக்கு விற்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் ஒரு மிகச்சிறிய மின்சார உறிஞ்சும் பம்ப் உதவியுடன் ஏரிவாயுவை பயன்படுத்துகிறார்கள்.

பிளாஸ்டிக் பைகளில் மூன்று முதல் நான்கு கிலோ வரை எரிவாயுவை நிரப்ப தோராயமாக ஒரு மணி நேரம் ஆகின்றது. மேலும் இரண்டு சிறுவர்கள் அப்படி நிரப்பப்பட்ட பைகளை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் வீடியோ அல்லது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் எந்த நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள் என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை நீங்களும் பாருங்கள்….