மகளின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா…. வைரலாகும் அழகிய புகைப்படங்கள்…

விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசத்தை மையமாகக் கொண்டுள்ளது இந்த சீரியல்.

maxresdefault-54

   

இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்தான் வெங்கட் ரங்கநாதன். இவர் இந்த சீரியல் மூலம் நன்கு பிரபலமாகிவிட்டார்.

e260482a-e1f8-4f81-bc27-0e972dcd6f0c

இவர் 1989 ஆம் ஆண்டு மே மாதம் பழனியில் பிறந்தவர். இவர் பிறந்து வளர்ந்தது அனைத்தும் பழனியில் தான்.

c140a979-7b1e-4ff3-accb-9710e5c8f100

இவர் முதன்முதலாக தொலைக்காட்சி தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானார்.

235f5dad-73e1-4250-9b5e-16607b323e05

அதன் பிறகு தான் இவருக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார்.

04267cb5-b1cb-480e-b35c-bbd354b238de

அதனைத் தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, மெல்ல திறந்தது கதவு மற்றும் நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.

b79bf10d-ce04-4b16-a64c-ecdc591b0ba4

அதேசமயம் திருமணம் போன்ற சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். பழனியில் உள்ள முனிசிபல் மேல்நிலைப் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்த இவர் புதுக்கோட்டையில் பொறியியல் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

dbdf7882-5a31-4673-bcda-c86d9f25f070

இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு பெயரை தேடித் தந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.

245be2df-5db3-47f9-a95d-aa64d7771481

இந்த சீரியலில் ஜீவா கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து விட்டது. இவர் அஜந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

f03cfc81-3450-4681-887f-a75bfc712c8d

இவரின் மனைவி போட்டோகிராபராக பணியாற்றி வருகின்றார். இவர்கள் இருவரும் பாலிடெக்னிக் படிப்பை ஒன்றாக தான் படித்தனர்.

563c9d3d-1174-49d1-9cbc-3c46f0feeb21

அப்போது ஏற்பட்ட நட்பு பிறகு காதலாக மாறிய நிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

325d0807-e840-46e8-8a84-46eba2d4eb79

தற்போது இவர்களுக்கு மகிழினி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தனது மகளின் பிறந்தநாளை மிக பிரம்மாண்டமாக வெங்கட் கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

907e89a3-35d1-457e-85f4-654bcbc9c7dd