‘மொத்தமா சேர்ந்து இப்ப நான் காலி’… ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன்- ஐஸ்வர்யாவின் கலக்கல் வீடியோ…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் .இந்த சீரியலில் அண்ணன் தம்பி குடும்ப ஒற்றுமை பற்றி விரிவாக எடுத்துக் கூறுவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் இந்த சீரியல் அன்பு, பாசம், ஒற்றுமை ,கோபம் ,வெறுப்பு, துரோகம் என அனைத்தையும் ஒருங்கே காட்டி வருகிறது.

   

ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருவகிறது. தற்போது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் தற்பொழுது ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கண்ணன் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்க்காக சிறைக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் இந்த சீரியலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்கள் சரவணன் விக்ரம் மற்றும் விஜே தீபிகா. இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஆனால் ஐஸ்வர்யா கதாபாத்திரம் தற்போது ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்பட்டு வருகிறது.

சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடிய இவர்கள் தற்பொழுது ட்ரெண்டிங் பாடலான ‘மொத்தமா சேர்ந்து இப்ப நான் காலி’  என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….