
பிக் பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியில் வரும் அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. இந்த சீசனில் முன்பு இல்லாத வகையில், ஒரு வீடு இல்ல இரண்டு வீடு என கமல் ஹாசன் சமீபத்தில் ஒரு உண்மையை கூறினார்.
அதாவது வீடு இரண்டாக இருந்து, அதில் இரு வீட்டுக்கும் போட்டி, சண்டை இருக்கும் என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்போடு, கருத்துக்களை கூறி வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் 7 சீசனில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்களின் பெயர்கள் சமூக வலைதளத்தில் கசிந்தும் வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்
அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் ரோலில் நடித்து வரும் குமரன், பிக் பாஸ் சீசன் 7க்கு போட்டியாளராக உள்ளே வர போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.
இதை கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் தினமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பார்க்கும் ரசிகர்கள், அப்போ கதிர் சீரியலில் இருக்கமாட்டாரா? என ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.