தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் திரையுலகில் முதன்முதலில் கால்பதித்த திரைப்படம் தான் பருத்திவீரன். இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய வெற்றியை தந்தது.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் மட்டும் இல்லாமல் சரவணன், கஞ்சா கருப்பு, பொன்வண்ணன், பிரியாமணி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள். பொதுவாக இந்த திரைப்படத்தின் கதை அம்சம் எவ்வளவு சிறந்ததாக அமைந்ததோ அதேபோல இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் மிகவும் தரமாகவும் ரசிகர்களை நடனம் ஆட வைக்கும் அளவிற்கு இருந்தது.
அப்படி இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்களை லஷ்மி அம்மாள் என்பவர் தான் பாடியிருந்தார். இவர் ஒப்பாரி, பூமி தாலாட்டு, திருவிழா போன்ற பல்வேறு இடங்களில் பாடியதன் மூலமாக நாட்டுப்புறபாட்டு பாடுவதற்காக சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து அவர் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
இவ்வாறு பிரபலமான பாடகி லட்சுமி அம்மாள் தற்பொழுது பண வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தற்பொழுது வரை நடிகர் கார்த்தி தான் தனக்கு பணம் கொடுத்து வருவதாகவும்,மேலும் அவ்வப்பொழுது தொலைபேசியில் பேசி நலம் விசாரிப்பதாகவும் கூறியுள்ளார். இவரின் இந்த பேட்டியானது ரசிகர்களின் மனதை கலங்க வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ…
View this post on Instagram