பிரபல பின்னணி பாடகி அனுராதாவின் கணவரா இவர்?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே… 

திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவராக வலம் வருபவர் பாடகி அனுராதா ஸ்ரீராம். இவர் ‘பம்பாய்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மலரோடு மலரிங்கு’ என்ற பாடலை குருப் பாடலாக பாடி திரையுலகில் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து வரும் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அன்பென்ற மழையிலே’ என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். அதன் பின்னர் இவர் பல படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

   

தன்னுடைய ஆறு வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கியவர். தற்பொழுது இவர்  இசைக்கச்சேரிகள்,, இசை நிகழ்ச்சிகள் என பலவற்றை நடத்திக் கொண்டு வருகிறார். பாடகி அனுராதா ஸ்ரீராம் பக்தி, காதல், துள்ளல், கில்மா என 4  பரிமாணங்களிலும் புகழ்பெற்றவர்.

‘கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு’, கண்ணன் வரும் வேளையில், மல்லிகையே மல்லிகையே, லேசா லேசா, நலம் நலம் அறிய ஆவல், மீனம்மா, ஒல்லிக்குச்சி உடம்புக்காரி என பல காதல் பாடல்கள் பாடியுள்ளார். இதைத்தொடர்ந்து அப்படி போடு போடு, அச்சம் அச்சம் இல்லை, கண்ணம்மா மீனு வாங்க போலாமா என பல துள்ளல் வகை பாடல்கள் இன்றும் பிளேலிஸ்ட்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதை தொடர்ந்து நிலவைக் கொண்டு வா, டேய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடா, ஓ போடு என பல கில்மா பாடல்களையும் பாடியுள்ளார். இப்பாடல்களை கேட்கும் பொழுது ‘அன்பென்ற மழையிலே’ என்ற பாடலை பாடிய அனுராதா வா இதையும் பாடினார் என ஆச்சரியமாக இருக்கும். இவ்வாறு நான்கு  பரிமாணங்களிலும் கலக்கியவர் பாடகி அனுராதா ஸ்ரீராம்.

இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவர் அனைத்து மொழிகளிலும் இதுவரை 4000ம் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். பாடகி அனுராதா ஸ்ரீராம் பாசுரம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது பாடகி அனுராதா ஸ்ரீராம் தன் கணவரோடு இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்  இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.