தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை திரிஷா.
இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படமானது கல்கி கைவண்ணத்தில் உருவான நாவலாகும். இந்த நாவல் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமான இரண்டு பாகங்களை கொண்ட படமாக உருவாகியுள்ளது .
‘பொன்னியின் செல்வன்- 1’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்தது. 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், முதல் பாகத்திலேயே தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை பெற்று தந்தது.
இப்படத்தில் குந்தவையாக திரிஷாவும், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராய்யும், வந்திய தேவனாக கார்த்தியும், கரிகாலனாக விக்ரமும் நடித்திருந்தனர்.
மேலும், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின் காக்குமானு, ஜெயசித்ரா, ரகுமான், சோபிதா துளிபாலா போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது . இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
அதை உறுதி செய்யும் வகையில் பிரமோஷன் பணி இப்பொழுது துவங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டு ரிலீஸ் தேதியை உறுதி செய்த நிலையில்,
தற்போது விரைவில் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என திரிஷாவின் விதவிதமான குந்தவை கெட்டப்புடன் கூடிய விடியோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ ஆனது ரசிகர்கள் மத்தியில் மிகுதந்த வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது.
#PS2 First Single Coming Soon ????#PonniyinSelvan2 From April 28th Worldwide ✨ pic.twitter.com/UURtAJBQpV
— Ayyappan (@Ayyappan_1504) March 9, 2023