பூவே உனக்காக படத்தில் விஜய் ஒருதலையாக காதலித்த நடிகையா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!!

பூவே உனக்காக படம்

1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக திரைப்படத்தில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் நடிகர் விஜயின் திரைவாழ்க்கையில் முதல் பெரிய வெற்றிப் படம் மற்றும் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் விஜய் தான் ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக நடிகை அஞ்சு அரவிந்த் நடித்திருப்பார்.

Vijay Poove Unakkaga Actress Anju Aravind

   

மேலும் இப்படத்தில் தனது காதல் நிறைவேறவில்லை என்றாலும் அந்த பெண் காதலித்த பையன் உடன் சேர வேண்டும் என விஜய் அந்த பெண்னின் சொந்த ஊருக்கு சென்று இரண்டு குடும்பங்களுக்கு நடுவில் இருக்கும் பிரச்சனையை தீர்க்க முயர்ச்சிப்பது தான் கதையாக இருக்கும். மேலும் இப்படத்தில் ‘காதல் என்பது பூ மாதிரி, ஒரு முறை உதிர்ந்துவிட்டால் திரும்பவும் செடியில் ஒட்ட வைக்கமுடியாது’ என விஜய் கிளைமாக்ஸில் பேசிய வசனம் ரொம்ப பிரபலமானது.

அஞ்சு அரவிந்த் லேட்டஸ்ட் போட்டோ

நடிகை அஞ்சு அரவிந்த் பூவே உனக்காக படத்திற்கு பின் பல படங்களில் நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன நிலையில், சில ஆண்டுகளிலேயே விவாகரத்தும் செய்துவிட்டார். அதன் பின் சீரியல்களில் நடித்து வந்தார். தற்போது இரண்டாம் கணவர் உடன் வாழ்ந்து வருகிறார். தற்போது அஞ்சு அரவிந்த் அவரது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.