திரைப்படங்களில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் யார் யார் தெரியுமா?… இதோ முழு பட்டியல்…

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களின் முழு திறமையை வெளிப்படுத்தி எதிரணி கொடுக்கும் சவால்களை சமாளித்து நாட்டிற்காக வெற்றிகளை பெற்றுத் தரும் கிரிக்கெட் வீரர்களை சினிமா பிரபலங்களுக்கு நிகராக கொண்டாடுகிறோம். அப்படி மக்களால் கொண்டாடப்படும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர். அவ்வகையில் சினிமாவில் நடித்த கிரிக்கெட் வீரர்கள் யார் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.

   

இர்பான் பதான்:

இந்தியாவிற்காக விளையாடிய ஒரு சிறந்த ஆல் கவுண்டர் வீரர்களில் இவரும் ஒருவர். இவர் சீயான் விக்ரம் நடித்து வெளியான கோப்ரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த நிலையில் அந்த படத்தில் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஹர்பஜன் சிங்:

இந்தியாவிற்காக கடந்த 2007 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை டி20 தொடரில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடி இந்திய அணிக்கு வெற்றி சேர்த்தவர். இவர் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் அர்ஜுன் ஜார்ஜா மற்றும் பிக்பாஸ் லாஸ்லியா ஆகியோர் நடித்துள்ளனர்.

சடகோபன் ரமேஷ்:

இந்தி அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர் தான் இவர். தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் என்பது நன்றாக தெரியும். அதாவது போட்டோ போட்டி என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும், ஜெயம் ரவி நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாகவும் இவர் நடித்துள்ளார்.

வருண் சக்கரவர்த்தி:

இந்திய அணியின் பின் பந்துவீச்சாளரான இவர் ஆரம்பத்தில் பஞ்சாப் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாட தொடங்கினார். அதன் பிறகு கொல்கத்தா அணியில் விளையாடி இந்திய அளவில் பிரபலமானார். இவர் விஷ்ணு விஷால் நடித்த ஜீவா திரைப்படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். விஷ்ணு விஷால் அந்த திரைப்படத்தில் கிரிக்கெட் வீரராக நடித்திருக்கும் நிலையில் அவரின் அணியில் இவர் சக வீரராக நடித்திருப்பார்.

டுவைன் பிராவோ:

உலக அளவில் நடைபெறும் டி20 தொடரில் எந்த தொடரை எடுத்துக் கொண்டாலும் இவரின் பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதன் காரணமாகவே இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாலும் உள்ளது. இவர் சித்திரம் பேசுதடி பாகம் 2 திரைப்படத்தில் ஒரு பாடலில் நடனமாடி இருப்பார். அந்தப் படத்தில் ஏன்டா எனப்படுகிற பாடலில் இவரை நடிக்க வைத்திருப்பார்கள்.

கபில் தேவ்:

இந்தியாவில் 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று ஆழமான விதை போட்டவர்தான் கபில்தேவ். அந்த அளவிற்கு பிரபலமான இவ்வாறு சல்மான்கான் நடித்த முஜ்சே சாதி கரோகிஎன்ற பாலிவுட் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருப்பார். மேலும் தொலைக்காட்சி தொடரான சி ஐ டி தொடரிலும் இவர் நடித்துள்ளார்.

அனில் கும்ப்ளே:

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான மிராபாய் நாட் அவுட் என்ற திரைப்படத்தில் முதன்மை வேடமாக மீரா இவருடைய தீவிர ரசிகையாக இருப்பார். அந்தப் படத்தில் தனது ரோலில் அனில் கும்ப்ளே தாம்மாகவே கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

பிரட் லீ:

வரலாற்றின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆன இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான விக்டரி என்ற பாலிவுட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதேசமயம் ஓய்வுக்குப் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளியான அன்பின் இந்தியன் என்ற பாலிவுட் திரைப்படத்திலும் ஆசிரியராக இவர் நடித்துள்ளார்.

கிரண் மோர்:

இந்தியாவின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவரான இவர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம் எஸ் தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்துள்ளார். அது போக 2016ஆம் ஆண்டு தமன்னா என்ற தொலைக்காட்சி தொடரிலும் இவர் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.