GOAT படப்பிடிப்பு.. பயங்கரமான கோவிலுக்கு சென்ற பிரபு தேவா.. எதுக்கு தெரியுமா.?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் பிரபுதேவாவும் இணைந்து இருக்கிறார். தற்போது அவர் கோட் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்திற்கு சென்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

   

இது குறித்து வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்ததாவது, பிரபுதேவா கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு பிரபலமான சோட்டானிக்கரை கோவில் ஒன்று இருக்கிறது. அந்த கோயிலில் பேய் ஓட்டுவார்கள். அங்கு சென்றாலே பயங்கரமாக இருக்கும். எல்லோரும் பயங்கரமாக கத்துவார்கள்.

அந்த கோவிலுக்கு சென்றுவிட்டு பயமின்றி வெளியில் வந்தாலே பெரிய விஷயம் தான். வழக்கமாக சிவாஜி புரொடக்சன் எடுக்கும் அனைத்து திரைப்படங்களுக்கான பெட்டிகளையும் அங்கு வைத்து தான் எடுத்துச் செல்வார்களாம். அது தான் அவர்களுக்கு ராசியாக கருதுகிறார்கள்.

எனவே, தற்போது பிரபுதேவாவும் அந்த சோட்டானிக்கரை கோவிலுக்கு சென்று வழிபட்டு விட்டு வந்துள்ளார் என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.