பிரபல நடிகருடன் கைகோர்த்து வெள்ளி திரை நடிகையாக மாறும் ராஜா ராணி சீரியல் நடிகை… யார் அந்த ஹீரோ தெரியுமா?…

ராஜா ராணி சீரியல் நடிகையான அர்ச்சனா தற்பொழுது வெள்ளித்திரையில் பிரபல நடிகருடன் கைகோர்த்து நடிக்க உள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் ராஜா ராணி சீசன் 2. ராஜா ராணி சீசன் 1 வெற்றியைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சீசன் 2 நிகழ்ச்சி தற்பொழுது பரபரப்பாக ஓடிக் கொண்டுள்ளது. இந்த சீரியலில் வில்லி  கதாபாத்திரத்தில் நடித்து பலரின் வெறுப்பை சம்பாதித்தவர் விஜே அர்ச்சனா.

   

இவர் சீரியலில் வில்லியாக இருந்தாலும் நிஜத்தில் குழந்தை குணம் கொண்டவர். இந்த சீரியல் மூலம் இவர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். ஆனால் இவர் திடீரென சீரியல் இருந்து விலகினார். இதற்காக அவர் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தற்பொழுது நடிகை அர்ச்சனா வெள்ளித்திரையில் பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது இவர் பிரபல நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாக உள்ளாராம். தற்பொழுது இச்செய்தியை கூறி அவர் தனது ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

இப்படத்தில் நடிப்பதற்காக தான் தன் சீரியலை விட்டு விலகியதாகவும், நடிகர் அருள்நிதியின் தங்கையாக இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் விஜே அர்ச்சனா கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது. நடிகை  அர்ச்சனாவுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.