கேப்டன் விஜயகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த ரஜினி , கமல்…. பலரும் அறிந்திடாத சுவாரசிய தகவல்கள் இதோ….

ரஜினியும், கமலும் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த காலத்திலேயே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். தமிழக மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் மக்களுக்காக  முன்வந்து நிற்பவர் தான் நம்ப கேப்டன். இவர் நடிப்பில் 1981 ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் “சட்டம் ஒரு இருட்டறை”.

   

இத்திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த்துக்கு ஜோடியாக பூர்ணிமா தேவி நடித்திருப்பார். இத்திரைப்படத்தை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். வடலூர் எஸ்.சிதம்பரம் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

நடிகர் விஜயகாந்த்தின் திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் “சட்டம் ஒரு இருட்டறை”. தற்பொழுது இத்திரைப்படத்தை பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதாவது இத்திரைப்படத்தின் ரீமேக்கில் ரஜினி மற்றும் கமல் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது 1983ல் பாலிவுட்டில் வெளியான திரைப்படம் “அந்தா காணுன்”. இத்திரைப்படம் “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

 

இதில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருந்தார். ஹேமா மாலினி கதாநாயகியாக நடித்திருந்தார். அமிதாப் பச்சான் ஒரு சிறப்புத் தோற்றத்தில் இத்திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படமும் ஹிந்தியில் மாபெரும் வெற்றிபெற்றது.

அதே போல் 1982 ல் மலையாளத்தில் வெளியான திரைப்படம் “மாட்டுவின் சட்டங்களே”. இத்திரைப்படம் “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படத்தின் மலையாள ரீமேக் ஆகும். இதில் கமல்ஹாசன் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் இதில் ரவிக்குமார், சீமா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இது மட்டுமின்றி “சட்டம் ஒரு இருட்டறை” திரைப்படம் கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்டதும்  குறிப்பிடத்தக்கது.