திடீரென திருவண்ணாமலையில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் ரஜினி… வெளியான புகைப்படங்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினி. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது.

   

இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகின்றார்.

திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

அதேசமயம் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே லால் சலாம் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்து சில நாட்களாக திருவண்ணாமலையை சுற்றி நடைபெற்று வருகின்றது.

இதனைத் தொடர்ந்து அதில் பங்கேற்பதற்காக திருவண்ணாமலை வந்துள்ள ரஜினி காலை மற்றும் மாலை என இரண்டு வேலையும் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து வருவதாக கூறப்பட்டது.

ஆனால் இதுவரை அவர் வந்து செல்வது யாருக்கும் தெரியாமல் ரகசியமாக இருந்து வந்தது. இந்நிலையில் சனி பிரதோஷ நாளான இன்று சிறப்பு நாளாக கருதப்படும் விலையில் சிவ தலங்களில் இன்றைய பிரதோஷ வழிபாடு சிறப்பு வாய்ந்தது.

எனவே இன்று காலை திடீரென அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு நடிகர் ரஜினி வருகை தந்தார்.

அருணாச்சலேஸ்வரர் மற்றும் அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த ரஜினியை அங்கிருந்தவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டனர்.

இருந்தாலும் கோவில் நிர்வாகிகள் அவரை பத்திரமாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

சிறந்த சிவ பக்தரான ரஜினி பிரதோஷ தினத்தில் சிவ வழிபாடு செய்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.